ஷா ஆலாம், அக் 11: மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா சாபாக் பெர்ணம் மற்றும் உலு லங்காட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இன்று மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை பெர்லிஸ், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும்.
மேலும் பொதுமக்கள் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my மற்றும் அதன் சமூக ஊடகங்கள், myCuaca மூலம் தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.