ஷா ஆலம், அக். 8 - இவ்வாண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதி நிலவரப்படி, ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.) 1 கோடியே 65 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வாரியத்தில் உள்ள மொத்த சேமிப்புத் தொகை
மொத்தம் 1.31 டிரில்லியன் வெள்ளியாகும்.
கடந்த 2023ஆம் ஆண்டு பதிவான 1.01 டிரில்லியன் வெள்ளி மற்றும் 2024 ஆம் ஆண்டில் பதிவான 1.20 டிரில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடும்போது இந்த பங்களிப்பு 9.9 சதவீதம் அதிகமாகும் என்று துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையில் 90 லட்சம் பேர் அல்லது மொத்த இ.பி.எஃப். உறுப்பினர்களில் 55 சதவீதம் பேர் இன்னும் சந்தா செலுத்தக்கூடிய உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் மொத்த சேமிப்பு 1.07 டிரில்லியன் வெள்ளியாகும்.
18 முதல் 55 வயதுக்குட்பட்ட தீவிர உறுப்பினர்களில் மொத்தம் 38.8 சதவீதம் பேர் வயதுக்கு ஏற்ப அடிப்படை சேமிப்பு நிலையை அடைந்துள்ளனர்.
இ.பி.எஃப். உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை, மலேசிய மக்களின் ஆயுட்காலம் மற்றும் ஓய்வூதிய வயது குறித்த தெப்ராவ் உறுப்பினர் ஜிம்மி புவா வீ சே எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், , குறைந்த சம்பள கட்டமைப்புகள் மற்றும் 55 வயதில் ஓய்வூதிய மீட்பு போன்ற பல காரணங்களால் போதுமான ஓய்வூதிய சேமிப்பு இல்லாத சூழ்நிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக லிம் கூறினார்.
ஊழியர் சேமநிதி வாரியத்தில் 1.65 கோடி உறுப்பினர்கள் - 1.3 டிரிலியன் தொகை சேமிப்பு
8 அக்டோபர் 2025, 9:53 AM