ஷா ஆலாம் அக் 8 - 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறை, குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
இந்நிலையில், பல்கலைக்கழகம் செல்லும் இந்திய மாணவர்களுக்கு தங்களின் மேற்கல்வியைத் தொடர பண சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.
நாடு முழுவதும் கல்வி கடனுதவியான PTPTN வழங்கப்பட்டாலும் சிலாங்கூர்மாநில அளவில் இந்திய மாணவர்களுக்கு ஒரு நெறிமுறைமிக்க நிதியுதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
இந்த விவகாரத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் ஒரு நல்ல பதிலை அளிப்பார் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக சொன்னார். காரணம், கல்வி ஒன்றே நம் இந்திய சமுதாயத்தின் வெற்றித் திரவுகோள் என்று வீ.பாப்பாராய்டு நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி செல்வமே நம்மிடமிருந்து அழிக்க முடியாத செல்வமாகும் என்று ஷா ஆலாமிலுள்ள சிலாங்கூர் மாநில அரசு தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்