ஷா அலம், 27 செப் — சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா வானிலை துறையான மெட்மலேசியா தெரிவித்ததாவது, இதே நிலை கோலாலம்பூர், பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலத்திலும், கெடா பேராக், திரங்கானு, பஹாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை குறுகிய கால எச்சரிக்கை ஆகும், ஒவ்வொரு வெளியீடும் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பொதுமக்கள் தொடர்ந்து சமீபத்திய மற்றும் தகவல்களை பெற www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca பயன்பாட்டை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.