ad

தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்கு வெ. 5,000 மானியம்

14 செப்டெம்பர் 2025, 9:48 AM
தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர்  ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்கு  வெ. 5,000 மானியம்

ஷா ஆலம்,  செப். 14-  பாண்டான் இண்டா, ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்கு தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் இயு ஜியா ஹார் வெ. 5,000 மானியம்  வழங்கினார்.

அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெராத்தாய் தொகுதி இந்திய சமூகத் தலைவர் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் அந்நிதியை  ஆலகி. சரஸ்வதி மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். மோகன்ராஜ்யப் பொறுப்பாளர்களிடம்  ஒப்படைத்தனர்.

இந்த தொகுதியில் உள்ள எட்டு  ஆலயங்கள் மற்றும் ஒரு  ஷீரடி பாபா நிலையத்திற்கு  தொகுதியின் சார்பில் இவ்வாண்டுக்கான மானியமாக தலா 5,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சரஸ்வதி கூறினார்.

இந்த ஆலயத்துடன் சேர்த்து  எட்டு வழிபாட்டுத்தலங்களுக்கு இதுவரை  மானியம் வழங்கப்பட்ட வேளையில் ஒரு ஒரு ஆலயத்திற்கான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த காலங்களில்  சில ஆலயங்களுக்கு மட்டும் அதிகப் பட்சம் 1,500 வெள்ளி   மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆலயங்களுக்கான மொத்த ஒதுக்கீடும் சுமார் பத்தாயிரம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.

ஆனால், நாங்கள்  பொறுப்பேற்றது முதல் ஆலயங்களுக்கான மானியம் 5,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்திக் கேட்டிருந்தோம்.

அதன்படி  இது வரை எட்டு  ஆலயங்களுக்கு  தலா 5,000 வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் மற்றொரு ஆலயத்திற்கு விரைவில் நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.