ad

மடாணி அடிப்படையில் கட்டுபடி விலை வீடுகள்- 2026 பட்ஜெட்டில் அறிவிக்க சிலாங்கூர் திட்டம்

12 செப்டெம்பர் 2025, 9:58 AM
மடாணி அடிப்படையில் கட்டுபடி விலை வீடுகள்- 2026 பட்ஜெட்டில்  அறிவிக்க சிலாங்கூர் திட்டம்

கோலாலம்பூர், செப். 12 - பள்ளிவாசல், பள்ளி மற்றும் பாலர் பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய மடாணி கோட்பாட்டின் அடிப்படையில் கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்களை அமல்படுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் மிக அதிகமாக அதாவது 72 லட்சம் மக்களை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதற்கேற்ப கட்டுபடி விலை வீடுகளை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு உண்டாகியுள்ளது என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த மடாணி கோட்பாட்டிலான திட்டம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. சிலாங்கூர் சொத்துடைமை மேம்பாட்டு வாரியம் பூமிபுத்ரா கோட்டா பராமரிப்பு அறங்காப்பு நிதியின் மூலம் வலுவான நிதிக் கையிருப்பைக் கொண்டுள்ளது.

சிலாங்கூர் கூ, ஸ்மார்ட் சேவா சிலாங்கூர் மற்றும் ரூமா இடாமான் போன்ற சிலாங்கூர் அரசின் வீடமைப்புக் கொள்கை மாநிலத்தின் வருமானத்திற்கு உதவியுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தி மடாணி கோட்பாட்டிலான வீடமைப்புத் திட்டங்களை விரைந்து கொள்ள முடியும் என நான் நம்புகிறேன் என் அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் கியாரா, சைம் டார்பி மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2026 சிலாங்கூர் பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்கள் புறநகர்ப் பகுதிகளான கோல லங்காட், சிப்பாங், கோல சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

இங்கு கட்டுபடி விலை வீடுகளை நியாயமான விலையில் விற்க முடியும். நகர்ப்புறங்களில் நிலத்தின் விலை அதிகமாக உள்ளதால் புறநகர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.