ஷா ஆலம், செப். 4 - தேசிய ஆசிரியர், பணியாளர் சங்க (என்.யு.டி.பி.) சிலாங்கூர் மாநிலப் பிரிவின் ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தீபகற்ப மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவின் தலைவர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி தலைமையிலான குழுவினருடன் இன்று நடைபெற்ற மரியாதை நிமித்தச் சந்திப்பின் போது இந்த மாநாடு குறித்த தகவல் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
தமது அலுவகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிற விஷயங்களுடன் சிலாங்கூர் மாநிலத்தில் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கல்வியாளர்களின் நலனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில என்.யு.டி.பி. ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு - நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும்
4 செப்டெம்பர் 2025, 10:11 AM