தேசிய தினக் கொண்டாட்டம்- புத்ராஜெயாவில் நாளை வானம் தெளிவாக இருக்கும்

30 ஆகஸ்ட் 2025, 6:46 AM
தேசிய தினக் கொண்டாட்டம்- புத்ராஜெயாவில் நாளை வானம் தெளிவாக இருக்கும்

கோலாலம்பூர், ஆக. 30-  புத்ராஜெயாவில் நாளை காலை வானிலை தெளிவாக  இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காலை, மாலை மற்றும்   இரவில்  மழை இன்றி வானிலை நன்றாக இருக்கும் என்று அத்துறை தனது  முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

புத்ராஜெயா இவ்வாண்டு மீண்டும் தேசிய தின கொண்டாட்டங்களை ஏற்று நடத்துகிறது. இந்நிகழ்வுக்கு 500,000 க்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,  பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சபா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசம்  ஆகிய ஒன்பது மாநிலங்களிலும் காலையில் மழை பெய்யும் என்று அத்துறை  கணித்துள்ளது.

பகாங், திரெங்கானு, கிளந்தான், சரவாக் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களிலும் இன்று காலை வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.