தேவைக்கு அதிகமாக உற்பத்தி - நாட்டில்  முட்டை விநியோகம் சீராக உள்ளது

28 ஆகஸ்ட் 2025, 10:04 AM
தேவைக்கு அதிகமாக உற்பத்தி - நாட்டில்  முட்டை விநியோகம் சீராக உள்ளது

புத்ராஜெயா, ஆக. 28 - உள்நாட்டுச் சந்தையில் கோழி முட்டை விநியோகம் போதுமான அளவிலும் நிலையானதாகவும் உள்ளது. உள்ளூர் உற்பத்தி இப்போது உள்நாட்டு தேவையை விட அதிகமாக உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி  முதல் முட்டைக்கான மானியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய உற்பத்தித் தரவு அடிப்படையில் பொதுச்  சந்தையில் சில்லறை விலை இந்தத் துறை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து சரிசெய்யும்.

இந்த விலை சரிசெய்தல் செயல்முறை பொதுச் சந்தை செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் இது பயனீட்டாளர்களுக்கான முட்டை விநியோகத்தை உறுதி செய்வதைப் பாதிக்காது என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிரேடு ஏ, கிரேடு பி, மற்றும் கிரேடு சி முட்டைகளின் விநியோகம் நிலையானதாக உள்ளதோடு  பல்பொருள்  கிடைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மலிவு விலையில் சிறப்பு தர முட்டைகளும் நியாயமான அளவில் வழங்கப்படுகின்றன.

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் வகையில் முட்டை உற்பத்தித் தரவுகளை அமைச்சு  தொடர்ந்து கண்காணித்து வேளாண் மடாணி விற்பனை முன்னெடுப்பை
பராமரிக்கும்  என்று அமைச்சு தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.