கோலாலம்பூர், ஆக. 28 - கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏழு இடங்களில் சோதனை நடத்திய போலீசார், 14 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மின்- சிகரெட் அல்லது வேப் திரவத்தில் எம்.டி.எம் போதைப் பொருளைக் கடத்திய கும்பலை முறியடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் தாய்லாந்து பெண் ஒருவர் உட்பட 24 முதல் 34 வயதுடைய ஒன்பது நபர்களை போலீசார் கைது செய்ததாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
போதைப்பொருளை பதப்படுத்தவும் சேமிக்கவும் வேலிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கொண்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கும்பல் பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் போதைப் பொருட்களை விநியோகிக்க கூரியர் எனப்படும் பொருள் பட்டுவாடா சேவையை அவர்கள் பயன்படுத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இச்சோதனையில் நாங்கள் 3.5 கிலோகிராம் எம் டி.எம் ஏ., 7.6 லிட்டர் எம்.டி.எம் ஏ. காட்ரிஜ் மற்றும் சுமார் 39 லிட்டர் எம்.டி.எம் ஏ. திரவ பாட்டில்களை பறிமுதல் செய்தோம்.
கடந்தாண்டு இறுதியிலிருந்து செயல்பட்டு வரும் கும்பல் வழக்கமான முறையில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதோடு வாடிக்கையாளர்களை குறிவைத்து கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியிலும் போதைப் பொருளை விநியோகித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம் என்று இன்று கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அக்கும்பலிடமிருந்து பல்வேறு வகையான வாகனங்கள், ஆடம்பரக் கடிகாரங்கள், டிசைனர் கைப்பைகள் மற்றும் 15 லட்சம் வெள்ளி ரொக்கத்தையும் தாங்கள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
வேப் திரவத்தில் போதைப் பொருள் கடத்தல்: கும்பல் முறியடிப்பு - வெ.14.8 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
28 ஆகஸ்ட் 2025, 9:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




