ANTARABANGSA

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க குழந்தை பராமரிப்பு மானியத்தை சீனா அறிவித்துள்ளது

30 ஜூலை 2025, 5:23 AM
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க குழந்தை பராமரிப்பு மானியத்தை சீனா அறிவித்துள்ளது

பெய்ஜிங், ஜூலை 30 - நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் மூன்று வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் குழந்தை பராமரிப்பு மானியத்தை சீனா அறிவித்துள்ளது.

அந்நாட்டின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. 2100ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 1.4 பில்லியனில் இருந்து 800 மில்லியனாகக் குறையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை மாதிரிகள் கணித்துள்ளன.

அந்நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் அதிக குழந்தைகளைப் பெற்று கொள்வதற்கு தயங்குவதால் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகின்றது என்று உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.

குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிக செலவு, நிச்சயமற்ற வேலை மற்றும் மந்தமான பொருளாதாரம் ஆகியவை நாட்டில் பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதையும் குடும்பத்தைத் தொடங்குவதையும் தடுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இந்தத் திட்டத்தை "தேசிய அளவில் முக்கியமான நலக் கொள்கை" என்று விவரித்துள்ள நிலையில், இந்த நேரடி பண உதவி, பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.