(ஆர்.ராஜா)
பந்திங், ஜூலை 28- இங்குள்ள சுங்கை மங்கீஸ், ஸ்ரீசிவ துர்க்கையம்மன்
முனீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா நேற்று வெகு சிறப்பாக
நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மனித வளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான
வீ.பாப்பாராய்டு சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.
இந்த திருவிழா சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உறுதுணையாக
இருந்த ஆலய நிர்வாகத்தினர் தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களுக்கு
அவர் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இத்தகைய விழாக்கள் சமய நம்பிக்கைக்கு வலுவூட்டும் அதே வேளையில்
அன்பு, பரிவு, மனிதநேயம், சமய நெறி உள்ளிட்ட நற்பண்புகளை
வளர்ப்பதற்கும் பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒற்றுமை உணர்வு
மேலோங்குவதற்கும் துணை புரிகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி, சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் வலுப்பெறச்
செய்வதிலும் சகிப்புத் தன்மையைப் பரப்புவதிலும் சமய விழாக்கள்
முக்கிய பங்கினை ஆற்றுகின்றன என்றார் அவர்.
இந்த விழாவில் ஆலய நிர்வாகத்தினர் பாப்பாராய்டுவுக்கு பொன்னாடைப்
போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.


