ஷா ஆலம், ஜூலை 26 - மந்திரி புசார் டத்தோ 'ஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத்தில் காற்று மாசுபாடு மிகுந்த இடங்களை கண்காணிக்க மாநில பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளால், குறிப்பாக 100 க்கும் மேற்பட்ட காற்று மாசுபடுத்தும் குறியீட்டை (ஏபிஐ) கொண்ட இடங்களில் அடிக்கடி ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
"பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மாநில நிர்வாக கவுன்சிலர் ஜமாலியா ஜமாலுதீன் மற்றும் மாநில பேரிடர் பிரிவை தினசரி காற்று மாசுபாடு நிலைமையை கண்காணிக்குமாறு கேட்டுள்ளேன், இது தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும்.
இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி அதிகாரப்பூர்வ விழாவுக்குப் பிறகு சந்தித்தபோது அவர், "பல இடங்களில் இன்னும் ஆரோக்கியமற்ற அளவுகள், 100 க்கும் மேற்பட்ட ஏபிஐ பதிவு செய்யப் பட்டாலும் (காற்று மாசுபாடு மிக்க இடங்களில்) முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
சிலாங்கூரில் சமீபத்தில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துக்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில செயற்குழுவிற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.
"கோலா குபு பாரு, காஜாங் மற்றும் ஸ்ரீ கோம்பாக் ஆகிய இடங்களில் ஏற்பட்ட மூன்று தீ சம்பவங்கள், கடவுள் செயலாக , விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன, ஆனால் கோலா குபு பாருவில் மேலும் தீ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அது கரிமண் பிரதேசம் (பீட்லேண்ட்) என்பதால் அது பற்றி கவலைப்படுகிறோம், ஏனென்றால் (தீ அந்த பகுதியை அடைந்தால்) அதை அணைக்க நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் ஒரு பெரிய செயல்பாட்டை உள்ளடக்கும், "என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்தோனேசியாவின் மத்திய மற்றும் தெற்கு சுமத்ராவிலிருந்து காட்டுத் தீ புகையைக் கொண்டு வரும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக, சிலாங்கூர் மற்றும் மேற்கு ஜோகூர் பகுதிகள் எல்லை தாண்டிய காற்று மாசுபாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கூறியது.
மெட் மலேசியாவின் துணை தலைமை இயக்குநர் (செயல்பாடுகள்) அம்புன் டண்டாங் கூறுகையில், செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு அந்த பகுதிகளில் ஏராளமான ஹாட்ஸ்பாட்கள் உறுதிப்படுத்தியது, அவை தற்போதைய காற்று வீசும் திசைக்கு ஒத்த தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைக்கு புகையைக் கொண்டு வருகிறது.


