ஷா ஆலம், ஜூலை 25: கசானப் புகைப்படப் போட்டி 2025யை சுபாங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு மொத்தம் RM2,400 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.
இப்போட்டி ஜூன் 5 முதல் ஜூலை 31 வரை ‘மறைக்கப்பட்ட புதையல்கள்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும். இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு RM750 வழங்கப்படும். அதனை தொடர்ந்து, இரண்டாம் இடத்திற்கு (RM500), மூன்றாம் இடத்திற்கு (RM150) மற்றும் 10 ஆறுதல் பரிசுகளாக (RM100) என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
மறைக்கப்பட்ட புதையல்கள் என்பது சுபாங் ஜெயா மாநகராட்சி பகுதியில் உள்ள இடங்களைக் குறிக்கிறது. அவை பொதுமக்களுக்கு அரிதாக தெரிந்தவையாக இருக்க வேண்டும். ஆனால் அதிக அழகியல், வரலாற்று அல்லது கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
“அவை தோட்டம், நீர் தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் உட்பட இயற்கை, வரலாற்று கட்டிடங்கள், தனித்துவமான உள்ளூர் கடைகள் அல்லது பொதுமக்களால் பொதுவாகக் காணப்படாத சுவாரஸ்யமான இடங்களாக இருக்கலாம்.
“பொதுமக்களால் அரிதாகவே பார்க்கப்படும் இடங்களின் தனித்துவத்தைப் படம்பிடிக்க விரும்பும் புகைப்படக் கலைஞரா நீங்கள்? உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லவும் இது உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
தங்கள் படைப்புகளை அனுப்ப ஆர்வமுள்ளவர்கள் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். மேலும், கூடுதல் தகவல்களை பெற https://forms.gle/DcsTsUWvMCnaagGE6 என்ற இணைப்பை நாடலாம் அல்லது 03-56210060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


