ஷா ஆலம் ஜூலை 25: நாளை எம்பிகேஜே ஶ்ரீ செம்பாக்க மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வருகையாளருக்குபல வேலை காலியிடங்கள் குறித்த முகப்பிடங்களை திறக்கவுள்ளது.
அதில் 99 ஸ்பிட்மார்ட் , சாத்தே காஜாங் சமூரி, கார்டியன், தாய் ஒடுசி ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
“இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பொது மக்களிடையே வேலை வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.
பணியமர்த்தல் செயல்முறையை விரைவுபடுத்துவது மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் உடனடியாக நேர்காணல்களில் பங்கு கொண்டு, வேலை வாய்ப்புகளை ஏற்க தயாராக தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஆர்வம் உள்ளவர்கள் https://bit.ly/TEMUDUGAKAJANG என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பாரத்தைப் பூர்த்தி செய்து தங்களைப் பதிந்து கொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு, www.myfuturejobs.gov.my/careerfair இணையத்தளத்தை நாடவும்.


