ஷா ஆலம், ஜூலை 25 – எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், திட்டமிடப்படாத எடை குறைப்பு மற்றும் உடல் பலவீனம் போன்ற ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண இலவச சுகாதார பரிசோதனை திட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இந்நிகழ்வு காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை KT பால்ரூம் • KWE ஷா ஆலமில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் வரவேற்கப்படுகின்றனர். இதில் நிபுணத்துவமிக்க சுகாதாரக் குழுவால் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற https://forms.gle/wTLphmmD4Po9Y8rAA எனும் வலைத்தளம் மூலம் ஆரம்பப் பதிவு செய்ய ஊக்கவிக்கப்படுகிஅது.
கூடுதல் தகவல்களுக்கு 011-33599480 (Azim) அல்லது (Mukhlis)
014-3432343 தொடர்பு கொள்ளவும்.


