ஷா ஆலம், ஜூலை 24: இந்த சனிக்கிழமை ஜேகேகேகே கம்போங் பண்டான் டலாம் தாமான் செம்பாக்கா, அம்பாங் மண்டபத்தில் மறுசுழற்சி (Trash To Cash) திட்டத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அருகிலுள்ள குடியிருப்பாளர்களைஅம்பாங் ஜெயா நகராண்மை அழைக்கிறது.
“இந்த திட்டம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளைக் குறைப்பதற்கும், உள்ளூர்வாசிகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும்” என்று அவர் கூறினார்.
மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் பின்வருமாறு:
1. பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் சேகரிப்பு (ஒரு கிலோகிராமுக்கு RM2)
2. மின் / மின்னணு கழிவுகளின் சேகரிப்பு (RM0.20/கிலோகிராம்)
3.அலுமினியம் RM1/கிலோகிராம் மற்றும் இரும்பு RM0.40/கிலோகிராம்
4. பெட்டிகள், காகிதம், பிளாஸ்டிக் RM0.20/கிலோகிராம்
கூடுதல் தகவலுக்கு, எம்பிஏஜே நகர்ப்புற சேவைகள் மற்றும் சுகாதாரத் துறையை 03-42857390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


