ஷா ஆலம், ஜூலை 23 : அரசாங்கம் ரஹ்மா மடாணி 2025 விற்பனைக்கான ஒதுக்கீட்டை RM600 மில்லியனாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு இது RM300 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இத்திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் 600 தொகுதிகளிலும் ரஹ்மா மடாணி 2025 விற்பனையை அதிகரிப்பதும் அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.


