SELANGOR

Ops Terjah Parking சோதனை நடவடிக்கையில் 3,930 சம்மன்கள் வழங்கப்பட்டன

21 ஜூலை 2025, 9:49 AM
Ops Terjah Parking சோதனை நடவடிக்கையில் 3,930 சம்மன்கள் வழங்கப்பட்டன

ஷா ஆலம். ஜூலை 21: மூன்று நாள் Ops Terjah Parking சோதனை நடவடிக்கை செயல்படுத்தலின் போது அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் மூலம் மொத்தம் 3,930 சம்மன்கள் வழங்கப்பட்டன.

தாமான் மூடா, பண்டான் இண்டா இண்டஸ்ட்ரி மற்றும் பண்டான் ஜெயா ஆகிய இடங்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தவறிய வாகனங்களுக்கு சோதனை நடவடிக்கையின் போது சம்மன்கள் வழங்கப்பட்டதாக எம்பிஏஜே தெரிவித்துள்ளது.

எம்பிஏஜே அமலாக்கத் துறையின் 10 உறுப்பினர்களின் பலத்தால் இந்த நடவடிக்கையில் புகார்களை மதிப்பாய்வு செய்வது மற்றும் கூட்டு கட்டண கவுண்டர்களைத் திறப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“கூடுதலாக, இரண்டு பறிமுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் மொத்தம் 248 சம்மன்கள் வழங்கப்பட்ட கட்டண கவுண்டர்கள் மூலம் செலுத்தப்பட்டன.

“எம்பிஏஜே நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து வர்த்தமானி பார்க்கிங் பகுதிகளிலும் அவ்வப்போது Ops Terjah தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க விதிக்கப்பட்ட சம்மன்களை செலுத்துமாறு எம்பிஏஜே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

சம்மன்கள் தொடர்பான எந்தவொரு தலவல்களுக்கு அமலாக்கத் துறையின் ஹாட்லைன் 03-4285 7024 என்ற எண்ணிலோ அல்லது pengajukuasa@mpaj.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.