SELANGOR

கோத்தா கெமுனிங்கில் இலவச செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

21 ஜூலை 2025, 2:21 AM
கோத்தா கெமுனிங்கில் இலவச செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

ஷா ஆலம், ஜூலை 21 – எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி கோத்தா கெமுனிங் குடியிருப்பாளர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (AI) கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஷா ஆலம் செக்‌ஷன் 28இல் அமைந்துள்ள கெனங்கா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கு 17 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு திறந்திருக்கும். மேலும், இந்த கருத்தரங்கு மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் வழிநடத்தப்படும்.

உற்பத்தித்திறனுக்கான ChatGPT மற்றும் பிற AI கருவிகளின் தொடர்பான நேரடி பயிற்சி மூலம் உங்கள் திறன்களை மேம்படுத்த இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதில் பங்கேற்று பயன்பெற ஆகஸ்ட் 1க்குள் https://forms.gle/bXzp8or2GDgkmCk7A என்ற இணைப்பின் வழி பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்க பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களுக்கு இலவச உணவு மற்று சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.