ஷா ஆலம், ஜூலை 17: இந்த வார இறுதியில் இரண்டு இடங்களில் நடைபெறும் ``Karnival Anak Selangor Anak Sihat `` நிகழ்வில் கலந்து கொள்ள சிலாங்கூரில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த நிகழ்வு சனிக்கிழமை ஷா ஆலம், செக்சன் 24இல் அமைந்துள்ள கோம்ப்ளெக்ஸ் கித்தா பி3, மற்றும் ஞாயிற்றுக்கிழமை கிள்ளானில் உள்ள செந்தோசா தமிழ்ப்பளியிலும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
ஏரோபிக்ஸ், பிஎம்ஐ சோதனைகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்துள்ளதாக பொது சுகாதாரஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் "செஃப் ஆசாஸ்" திட்டம் கீழ் ஆரோக்கியமான உணவை சமைக்கும் நடவடிக்கை, 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் ஸ்கிப்பிங் ஆகியவை இடம்பெறும்.
கூடுதலாக, ஒவ்வொரு நாளும் முதல் 150 வருகையாளர்கள் ஒரு நினைவுப் பையைப் பெறுவார்கள். அதே நேரத்தில் வர்ணம் தீட்டும் போட்டியில் முதல் 50 பங்கேற்பாளர்களுக்கு இலவச வண்ணப் பென்சில்கள் வழங்கப்படும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான சூழ்நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆதரிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


