SELANGOR

மரண சகாய நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிகிஞ்சானில் நடமாடும் கவுண்டர் ஏற்பாடு

15 ஜூலை 2025, 8:28 AM
மரண சகாய நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிகிஞ்சானில் நடமாடும் கவுண்டர் ஏற்பாடு
மரண சகாய நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிகிஞ்சானில் நடமாடும் கவுண்டர் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 15: எதிர்வரும் சனிக்கிழமை சிகிஞ்சானில் யாவாஸ் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் கவுண்டர்கள் மூலம் காய்ராட் டாருள் ஏஹ்சான் எனப்படும் மரண சகாய நிதி திட்டத்திற்கு தகுதியான நபர்கள் பதிவு செய்யலாம்.

இந்த திட்டம் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு (OKU) RM1,000 இறப்பு இழப்பீட்டை வழங்குகிறது.

பொதுமக்கள் தகவல்களைப் பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க அருகிலுள்ள இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் தகவலுக்கு, kde.yawas.com.my என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024 மூலம், 20,000 பெறுநர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய மாநில அரசு RM20 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.