ஷா ஆலம், ஜூலை 15: டுசுன் துவா மற்றும் செமினி தொகுதிகளில் பள்ளி சீரமைப்பு பணிகளுக்காக RM60,000 ஒதுக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி மாநிலப் பள்ளி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கபப்டுகிறது. இரண்டு தொகுதிகளிலும் இந்த நிதியைப் பெற நான்கு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹன் அப்துல் அஜீஸ்
கூறினார்.
“நிதியைப் பெற பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகள் துன் அப்துல் அஜீஸ் மஜிட் மற்றும் டுசுன் துவா தேசியப் பள்ளிகள் (டுசுன் துவா தொகுதி) மற்றும் பண்டார் ரிஞ்சிங் தேசியப்பள்ளி மற்றும் கிர் ஜோஹாரி இடைநிலைப்பள்ளி (செமினி தொகுதி) ஆகியவை ஆகும்.
“இந்த திட்டத்தில் உள்கட்டமைப்பு, வடிகால்கள் மற்றும் கூரைகள் சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தப்படும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மாநிலத்தில் உள்ள பள்ளிகள் நல்ல மற்றும் வசதியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் அக்கறை காட்டியதற்காக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு சட்டமன்ற உறுப்பினர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“இந்த மாதம் காசோலை ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு உடனடியாகப் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்படலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.


