கிள்ளான் ஜூலை ; செந்தோசா சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பத்து உஞ்சோர் இடைநிலைப் பள்ளியின் ஆதரவுடன் பள்ளி சுகாதார அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
கண்பார்வை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் இனி தங்கள் கற்றல் நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள இந்த இந்த முன்னெடுப்பு பெரிதும் உதவும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்துவதன் வழி கல்விக்கு ஆக்கத் திறனளிக்கும் மூன்றவது உறுதி மொழி குழுவுக்கு தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
கல்வி அனைவருக்குமானது. அதனைப் பெறுவதிலிருந்து யாரும் விடுபடக்கூடாது என வலியுறுத்திய குணராஜ், இந்த இலவச மூக்கு கண்ணாடித் திட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த பத்து உஞ்சோர் இடை நிலைப்பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட தரப்பிரை தாம் பாராட்டுவதாக குறிப்பிட்டார்.


