MEDIA STATEMENT

அமெரிக்காவின் புதிய வரிக்கு மேக்ரோன் கடும் எதிர்ப்பு

13 ஜூலை 2025, 2:59 AM
அமெரிக்காவின் புதிய வரிக்கு மேக்ரோன் கடும் எதிர்ப்பு

இஸ்தான்புல், ஜூலை 13 - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு  அமெரிக்கா 30 விழுக்காட்டு வரியை விதிப்பதற்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலடியாக "நம்பகமான எதிர் நடவடிக்கைகளை" துரிதப்படுத்த அவர் கோரிக்கை விடுத்ததாக அனாடோலு ஏஜென்சி செய்தி கூறியது.

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி  முதல் அமெரிக்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி பொருள்கள் மீது  30 விழுக்காட்டு வரி   அறிவிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருடன் சேர்ந்து பிரான்சும்  கடுமையான ஆட்சேபத்தை பகிர்ந்து கொள்கிறது என்று அவர் சனிக்கிழமை எக்ஸ் தளத்தில்  (முன்னர் ட்விட்டர்) அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய நலன்களை உறுதியாக நிலைநிறுத்துவதற்கான கூட்டு நாடுகளின் உறுதியை ஒன்றியம்  மறு உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேக்ரோன் மீண்டும் வலியுறுத்தினார்.

குறிப்பாக, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் வரி விதிப்புக்கு  எதிரான நடவடிக்கைகள் உட்பட தன்வசம் உள்ள அனைத்து சக்தியையும்  திரட்டுவதன் மூலம் நம்பகமான எதிர் நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும் என்று என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்பாட்டை எட்டுவதற்கு தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்கு பிரான்சின் "முழு ஆதரவை" மக்ரோன் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.