(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 11- கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்த மாணவர்களை தொகுதி சேவை மையம் பாராட்டி கெளரவித்தது.
எஸ்.பி.எம். தேர்வில் மிகவும் சிறப்பான முறையில் தேறிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வை தொகுதி இவ்வாண்டு முதன் முறையாக நடத்துவதாக அதன் சட்டயன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.
முதுமையானவர்களைக் கொண்ட தொகுதி என பெயர் பெற்ற புக்கிட் காசிங் தொகுதியில் கல்வியில் சிறந்து விளங்கும் இளையோரை பாராட்டி கெளரவிக்க வேண்டும் எனும் நோக்கில் இந்நிகழ்வுக்கு தாங்கள் ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார்.
இந்ந நிகழ்வில் ஜிஸ்னு த/பெ சோமு (11ஏ), பிராயன் டான் ஜியான் ஹோங் (10ஏ), சித்தி மைசாரா பிந்தி ஒஸ்மான் (9ஏ), கோக் காய் சயேன் (9ஏ), யாப் சின் லீ (11ஏ), ரிசாந்த் இலக்கியல் பொன்ராஜ் (10ஏ), ஸாரா
அலிஸா இக்மால் ஹிஷாம் (9ஏ), நகஸ்கந்தன் த/பெ நாகராஜன், ஓங் சுன் அய்க் (11ஏ) ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.


