ஷா ஆலம், ஜூலை 7: பந்திங் தொகுதியில் மொத்தம் 15 சிறந்த எஸ்.பி.எம் மாணவர்கள் RM500 வெகுமதி பெற்றனர்.
இத்திட்டத்திற்காக மொத்தமாக செலவிடப்பட்ட RM7,500 வெறும் நிதி வெகுமதி மட்டுமல்ல, உயர்கல்வி மற்றும் பணியிடத்தில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான பாராட்டு மற்றும் ஊக்கத்தின் சின்னம் என்றும் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
“இந்தத் திட்டம் வருடாந்திர நிகழ்வாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், அதிகமான மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்க ஊக்கவிக்க முடியும் என நன்கொடை வழங்கும் நிகழ்வில் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இந்த நிகழ்வில், பார்வைத்திறன் அடிப்படையில் உதவி தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட கோலா லங்காட், ஜென்ஜாரோம் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த 50 மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளையும் அவர் வழங்கினார்.
“அவர்களில் சிலர் இந்த பிரச்சனை காரணமாகப் படிக்க சிரமப்படுகிறார்கள். ஆனால் குடும்ப நிதி நெருக்கடியால் சிகிச்சை பெற அல்லது மூக்கு கண்ணாடிகளை வாங்க இயலவில்லை.
“இந்தக் மூக்கு கண்ணாடிகளின் உதவியுடன், அவர்களின் கற்றல் செயல்திறன் மேம்படும். இந்தத் திட்டம் பந்திங் தொகுதியில் உள்ள பிற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் மற்றும் இத்திட்டம் மூலம் அதிக மாணவர்கள் பயனடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


