(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 3 - கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப்
பதிவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் வருடாந்திர நிகழ்வை கோத்தா கெமுனிங் தொகுதி இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது.
எஸ்.பி.எம். தேர்வில் 8ஏ மற்றும் அதற்கும் மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் இந்த நிகழ்வு இம்மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஷா ஆலம், கோத்தா கெமுனிங் டேவான் தானியாவில் நடைபெறும்.
மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு இந்த நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிவார்.
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் அதேவேளையில் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
எஸ்.பி.எம். மாணவர்களை கெளரவிக்கும் இந்நிகழ்வு கடந்த மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை புக்கிட் ரீமாவ் ஏஸ்டர் மண்டபத்தில் நடத்தப்படவிருந்தது.
எனினும், அதற்கு முந்தைய தினம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான நிவாரண மையமாக அந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டதால் இந்நிகழ்வு பிறிதொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


