ANTARABANGSA

பாகிஸ்தானில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 45 பேர் மரணம்

30 ஜூன் 2025, 5:55 PM
பாகிஸ்தானில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 45 பேர் மரணம்

இஸ்லாமாபாத், ஜூன் 30 - பாகிஸ்தான் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவத்துல் இதுவரை 45 பேர் உயிரிழந்திருப்பதாகப் பேரிடர் நிர்வகிப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மட்டும் 10 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர். இதனிடையே, இந்திய எல்லையுடன் உள்ள பஞ்சாபில் புதன்கிழமை தொடங்கி 13 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வெள்ளத்தினால் சிலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களை தேடி மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பருவநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் 24 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் ஒன்றாகும்.

பெர்னாமா

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.