வாஷிங்டன், ஜூன் 9 - நேற்று, அமெரிக்காவில் உள்ள தென்னஸீ மாநிலத்தில் 20 பேருடன் சென்ற வான்குடை சாகச விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதாவது வானிலிருந்து குதிக்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் இரட்டை இயந்திர விமானமாகும்.
நேற்று நண்பகலில் Tullahoma விமான நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.மேலும், காயமடைந்த மூவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
அதில் ஒருவருக்கு சற்று மோசமான காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் தரை வழியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளானவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணத்தை கூட்டரசு வான் போக்குவரத்து அதிகாரத் தரப்பு ஆராய்ந்து வருகிறது.



