MEDIA STATEMENT

ஜெம்போலில் புயலால் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன

25 மே 2025, 4:02 AM
ஜெம்போலில் புயலால் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன

சிரம்பான், மே 25: நேற்று பிற்பகல் பெய்த புயல் மற்றும் கனமழையால் ஃபெல்டா லூயி பாராட்டில் 83 வீடுகளும், ஜெம்போலில் உள்ள ஆயிர் ஈத்தாம் புது கிராமத்தில் ஆறு வீடுகளும் சேதமடைந்தன.

மலேசிய சிவில் பாதுகாப்பு படை (ஏபிஎம்) நெகிரி செம்பிலான் மாநில இயக்குனர், லெப்டினன்ட் கர்னல் (பிஏ) முகமது நஸ்ரி மெஸ் காம், ஃபெல்டா லூயி பாராட்டில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 224 பாதிக்கப்பட்டவர்களை பதிவு செய்ததாகவும், ஆயிர் ஈத்தாம் புது கிராமத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரை பதிவு செய்ததாகவும் கூறினார்.

முன்னதாக மாலை 6:14 மணிக்கு ஃபெல்டா லூயி பாராட்டில் சம்பவம் நடந்த இடத்திற்கு நான்கு உறுப்பினர்கள்  கொண்ட குழு,  பலத்த காற்று காரணமாக பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளின் பல கூரைகள் அடித்துச் செல்லப் பட்டதைக் கண்டறிந்தனர், இதனால் 83 வீடுகள் பாதிக்கப் பட்டன.

தேசிய உயர்நிலைப் பள்ளி லூயி பாராட்டில் இயங்கும் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) இதுவரை ஆறு குடும்பங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும்,  ஆயிர் ஈத்தாம் புது கிராமத்தில் தற்காலிக தங்குமிடம் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.