MEDIA STATEMENT

கெஅடிலான் பொதுப் பேரவை- பேராளர்களின் விவாதம் தொடர்கிறது

24 மே 2025, 4:11 AM
கெஅடிலான் பொதுப் பேரவை- பேராளர்களின் விவாதம் தொடர்கிறது

ஜோகூர் பாரு, மே 24- கெஅடிலான் ராக்யாட் கட்சியின் 2025/2026 ஆம்

ஆண்டு பொதுப் பேரவையை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த

வேளையில் தலைவரின் கொள்கையுரை மீதான விவாதம் இன்று

தொடர்கிறது.

இங்குள்ள பெர்சாடா மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில்

இன்று காலை 9.20 மணிக்கு பேராளர்களின் விவாதம் தொடங்கியது.

மாநில, இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 16

பேராளர்கள் இந்த விவாத த்தில் கலந்து கொள்கின்றனர்.

பல்லின மலேசியாவை உருவாக்குவதற்கான நீண்டகாலத் திட்டம்,

கட்சியை வலுப்படுத்துவதில் உறுப்பினர்களின் பங்கு உள்ளிட்ட

தலைப்புகளில் பேராளர்கள் தங்கள் விவாதங்களை முன்வைப்பர்.

மேலும், உதவித் தொகை, ஊதியம் மற்றும் வாழ்க்கைச் செலவினம், சபா

மாநில தேர்தல், நாட்டின் நிர்வாகத்தில் இஸ்லாம் 1963ஆம் ஆண்டு

மலேசிய ஒப்பந்தம் ஆகிய அம்சங்ளைத் தொட்டும் பேராளர்கள்

விவாதிப்பர்.

பின்னர் கட்சியின் நிரந்தரத் தலைவர், நிரந்தரத் துணைத் தலைவர்,

மத்திய தேர்தல் குழுவின் புதிய தலைவர்களின் நியமனத்தை டத்தோஸ்ரீ

டாக்டர் ஜலிஹா முஸ்தாபா அறிவிப்பார்.

அதன் பின்னர் பழைய மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கு பதிலாக

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்கள்

மேடையில் அமர்வர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.