முட்டைகளுக்கான உதவித் தொகை ஒரு பகுதி நிறுத்தம்

30 ஏப்ரல் 2025, 3:05 PM
முட்டைகளுக்கான உதவித் தொகை ஒரு பகுதி நிறுத்தம்

கோலாலம்பூர், ஏப்ரல் 30 - எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, கோழி முட்டைகளுக்கான உதவித் தொகையை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவித் தொகை முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, நாளை தொடங்கி ஒரு முட்டைக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை, 10 சென்னில் இருந்து ஐந்து சென்னுக்கு குறைக்கப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு (கே.பி.கே.எம்) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளூர் முட்டை உற்பத்தி துறைக்கும் நாட்டின் நிதிக்கும், நீண்ட காலத்திற்கு உதவித் தொகைகளை வழங்கும் நடவடிக்கையை நீட்டிக்க கூடாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டினரும் அதிக ஊதியம் பெறும் தரப்பினர்களும் இந்த உதவித் தொகைகளினால் பயனடைவதால், அதற்கு மறுஇலக்கு செய்யும் நடவடிக்கை நியாயமானது என்றும் அது தெளிவுப்படுத்தியது.

பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.