ANTARABANGSA

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்

29 ஏப்ரல் 2025, 4:57 AM
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்

மணிலா, ஏப்ரல் 29 - இன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் சுமார் 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு வானில் கரும்புகை சூழ்ந்தது.

இதனால், புலுசான் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள், எரிமலையிலிருந்து வெகு தூரம் தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது குறைவாகக் காணப்படும் எரிமலையின் சீற்றம், பின்னர் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என, எரிமலையியல் கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.36 மணிக்கு எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள புலுசான் எரிமலை அதிகமான சீற்றத்தை வெளியேற்றும் மலையாகக் கருதப்படுகின்றது.

அதிகாலை 4.36 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு முன்னர், 24 மணி நேரத்தில் 53 எரிமலை நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன.

பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.