சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாசுபாடு- வர்த்தக வளாக உரிமையாளர் கைது

29 ஏப்ரல் 2025, 2:36 AM
சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாசுபாடு- வர்த்தக வளாக உரிமையாளர் கைது

சிரம்பான், ஏப். 29-  சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்  ஏற்பட்ட நீர் மாசுபாடு தொடர்பான  விசாரணைக்கு உதவுவதற்காக தொழில்துறை பயன்பாட்டிற்கான எரிபொருள் எண்ணெயை விற்பனை  வளாகத்தின் உரிமையாளரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நீர்த் தூய்மைக்கேடு  தொடர்பில் கடந்த புதன்கிழமை கிடைத்த புகாரைத் தொடர்ந்து அந்த  31 வயது நபர் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ்  தலைவர் ஏசிபி முகமது ஹத்தா சே டின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து  ஆற்று நீரில் மாசுபாடு ஏற்பட்டது தொடர்பில்  நெகிரி செம்பிலான் நீர் நிறுவனத்தின் (சைன்ஸ்) நிர்வாக உற்பத்தி அதிகாரியிடமிருந்து  தங்களுக்கு  புகார் வந்ததாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள  நீர் மாதிரிகளை சோதனை செய்த சுற்றுச்சூழல் துறை அந்த நீர் பயன்படுத்த பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின்  430 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.