கங்கார் பெர்லிஸ், ஏப்ரல் 22 - கங்காரில் உள்ள பிங்கீர் பண்டார் கங்கார் இடைநிலைப்பள்ளியின் கழிப்பறையில் வேப் புகைத்த 3ஆம் படிவ மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
வலிப்பு ஏற்பட்ட அம்மாணவன், தனது 2 நண்பர்களுடன், காலை 9.30 மணிக்கு ஆங்கில தேர்வு வேளையில், ஆசிரியரின் அனுமதியின்றி கழிப்பறைக்குச் சென்றதாகப் பெர்லிஸ் மாநில கல்வி இயக்குனர் திரு. ரோஸ் அசா சே அரிஃபின் தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாணவனின் வாயில் நுரை தள்ளி, மயங்கிய நிலையில், இரண்டு நண்பர்கள் வகுப்பறைக்கு கொண்டுவந்ததாக அந்த பள்ளியின் ஆங்கில தேர்வு கண்காணிப்பு ஆசிரியர் தெரிவித்தார்.
உடனடியாக அம்மாணவன் சிகிச்சைக்காக கங்கார் துவாங்கு ஃபௌசியா மருத்துவமனைக்கு (HTF) கொண்டுச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.


