கோலாலம்பூர், ஏப்ரல் 13 - பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிசி ராம்லி, பார்டி கெ அடிலான் ராக்யாட் தொகுதி தலைவராக 883 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாஹரும் பின் மூசா 444 ஓட்டுகள் பெற்றார்.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கோம்பாக் தகுதி தலைவராகவும், துணை தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் சுங்கை பூலோ தொகுதி தலைவராக, மற்றும் முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் ஹங் டாமன்சாரா தொகுதி ஆகியோர் போட்டியின்றி தொகுதி தலைவர்களாக வெற்றி பெற்றனர்.
பிரபல ராப்பர் சையத் அகமது சையத் அப்துல் ரஹ்மான் அல்ஹாதாத், ஆல்டிமெட் என்று நன்கு அறியப்பட்டவர், மூன்று மூலைகளிலான போட்டியில் 1926 ஓட்டுகள் பெற்று கெ அடிலான் அம்பாங் தொகுதி தலைவராக தனது நிலையை தற்காத்துக் கொண்டார், அவரை எதிர்த்து போட்டியிட்ட முகமாட் கம்ரி பின் கமாருடின் 1926 ஓட்டுகளும், அஸ்ருல் அஸ்வாடி 236 ஓட்டுகளும் பெற்றனர்.
இதை தவிர்த்து முக்கியமாக கவனிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான கோத்தா ராஜா தொகுதி தலைவராக அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான குணராஜ் ஜோர்ஜ் 4643 ஓட்டுகளில் வெற்றி பெற்றார், அவரை எதிர்த்து போட்டியிட்ட மகேந்திரன் 1615 ஓட்டுக்களை பெற்றார்.
கிள்ளான் தொகுதியில் பிலபோஹான் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் 1774 ஓட்டுகளைப்பெற்று வென்றார். அத்தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான யூ புன் லாய் 553 ஓட்டுகள் பெற்றனர்.
அதிகம் பேசப்பட்ட மற்றொரு தொகுதியான கோலசிலாங்கூர் தலைவர் பதவியை சிவபாலன் முகுந்தன் 1498 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார், அத்தொகுதி ஆறு முனை போட்டியை சந்தித்தது இதில் தீபன் சுப்ரமணியம் 1061 ஓட்டுகள், ஒங் ஹேய்கின் 1018 ஓட்டுகள், லிம் லாய் செங் 109 ஓட்டுகள், முகமது பைசால் 88 ஓட்டுகள் மற்றும் கோபூ 4 ஓட்டுகள் பெற்றனர்.
கோல லங்காட் தொகுதி 4 முனை போட்டியை சந்தித்தது, தொகுதி தலைவராக முகமாட் அபிக் 2610 ஓட்டுகள் பெற்று வென்றார். ஹரிதாஸ் ராமசாமி 1916 ஓட்டுகளும், தான் கெங் சியாங் 1849 ஓட்டுகள் மற்றும் ஷூஜியோங் சியான் 1070 ஓட்டுகள் பெற்றனர்.








