சிகிச்சையின்போது இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாகப் புகார்- மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார்

12 ஏப்ரல் 2025, 11:04 AM
சிகிச்சையின்போது இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாகப் புகார்- மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார்

குவாந்தான், ஏப்ரல் 12-  ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த  இரட்டைக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த  ஒரு போலி மருத்துவரால்  கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோல லிப்பிஸ் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் செய்துள்ளது.

இவ்விவகாரத்தை தாங்கள் கடுமையாகக கருதுவதாகவும் இதன் தொடர்பில்  தொடக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பகாங் மாநில சுகாதாரத் துறை  இன்று வெளியிட்ட  அறிக்கையில்   கூறியது.

குற்றச்சாட்டில்  கூறியபடி இரட்டையர்கள் யாரும் மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெறவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், கடைசியாக  2024 ஜூலை மாதம் சம்பந்தப்பட்ட தாய் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என அது கூறியது..

டாக்டர் அமலினா ஹுஸ்னா என்ற போலி மருத்துவர் ஒன்பது மாதங்கள் "குழந்தையை" பராமரித்தார் என்ற குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம்  அந்த மருத்துவர் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் பணிபுரிந்ததற்கான எந்த பதிவும் இல்லை எனக் கண்டறியப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.

எந்தவொரு ஆதாரமற்ற செய்தியும் விருப்பம்போல் பரப்பப்படுவதைத் தடுப்பதற்காக

இந்த குற்றச்சாட்டு  தொடர்பாக கோல லிப்பிஸ் மருத்துவமனையின் உயர் நிர்வாகம் நேற்றிரவு  போலீஸில் புகார் செய்தது.

கோல லிப்பிஸ் மருத்துவமனை  குறிப்பாக மாநில சுகாதாரத் துறையின் நிர்வாகம் மற்றும் சிகிச்சையின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை பாதிக்கக்கூடும் என்பதால்

தகவல்களை விநியோகிக்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அது நினைவுறுத்தியது.

"கோல லிப்பிஸ் மருத்துவமனையில் போலி மருத்துவரால் காணாமல் போன இரட்டைக் குழந்தைகள்" என்ற தலைப்பில் ஒரு முகநூல்  பக்கம் வழி ஒரு பதிவு வெளியாகி  சமூக ஊடகங்களில் வைரலானது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.