MEDIA STATEMENT

சீன அதிபர் மலேசியாவிற்கு வருகை

10 ஏப்ரல் 2025, 3:01 AM
சீன அதிபர் மலேசியாவிற்கு வருகை

கோலாலம்பூர், ஏப்ரல் 10 - ஏப்ரல் 15 தொடங்கி 17ஆம் தேதி வரை சீன அதிபர் ஸி ஜின் பெங் மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவுள்ளார்.

அப்பயணம், இருவழி உறவை குறிப்பாக வர்த்தகத் துறையில் வலுப்படுத்தும் முயற்சியாக அமையும் என்று அமைச்சரவை எதிர்பார்ப்பதாக மடாணி அரசாங்க பேச்சாளரும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்  தெரிவித்தார்.

அமைச்சரவைக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீன அதிபரின் மலேசியாவிற்கான பயணம் குறித்த மேல் விவரங்களை விஸ்மா புத்ரா அறிவிக்கும் என்றும் ஃபஹ்மி கூறினார்.

 

பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.