ANTARABANGSA

தென் கொரியா காட்டுத் தீயினால் குறைந்தது 30 பேர் உயிரிழப்பு

2 ஏப்ரல் 2025, 2:40 AM
தென் கொரியா காட்டுத் தீயினால் குறைந்தது 30 பேர் உயிரிழப்பு

உய்சோங், ஏப்ரல் 2 - தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தீக்கான காரணத்தை கண்டறிய அப்பகுதிகளில் ஆய்வை மேற்கொள்ள அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

இக்காட்டுத் தீயினால் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உட்பட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன.

கடந்த மார்ச் 22-ஆம் தேதி, உய்சோங் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் கல்லறை அருகே சடங்குகளை செய்த 50 வயது ஆடவர் ஒருவரால் இத்தீப் பரவி இருக்கலாம் என்று கியோங்பக் மாகாண காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆதாரங்களை அடையாளம் காணும் பொருட்டு, காவல்துறை தரப்புடன் தீயணைப்பு மற்றும் தேசிய தடயவியல் துறைகள் இணைந்து பணியாற்றுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபோன்ற பேரழிவுகளைச் சமாளிப்பதற்கான சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கு, கடந்த வாரம் உய்சோங் மற்றும் நாடு முழுவதிலும் ஏற்பட்ட பிற தீவிபத்துகள் வித்திட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் காட்டுத் தீச்சம்பவங்கள் மேலும் மோசமடைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.