ஷா ஆலம் ஏப் 1 ;- இன்று காலை 8.28 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு
வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அத்துறையின்
நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்
கூறினார்.
சம்பவ இடத்தில் தீ கொளுந்து விட்டு எரியும் நிலையில் தீ
ஜூவலைகளை பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து காண முடிகிறது.
இந்த தீவிபத்தை சித்தரிக்கும் படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில்
பகிர்ந்து கொண்ட சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென்,
தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் பொருட்டு சுபாங் ஜெயா மாநகர்
மன்றத்தின் பந்தாஸ் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக்
கூறினார்.
சம்பவ இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி
அறிவுறுத்திய அவர், அனைவரும் பாதுகாப்பாக இருக்க தாம்
பிரார்த்திக்கும் அதேவேளையில் தீயணைப்பு வீரர்கள் தீயை
வெற்றிகரமாக கட்டுப்படுத்துவர் என நம்புவதாகச் சொன்னார்.
இதற்கிடையே, தீ ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சம்பவ
இடத்தில் தீயின் தாக்கம் சிறிதும் குறையவில்லை என்று டிக்டாக் பயனர்
ஒருவர் பூச்சோங் பெரேடுவா கணக்கில் பதிவிட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வெகு தொலைவில் இருந்த போதிலும் பலத்த வெடிச்
சத்தம் எழுந்ததாகவும் அதனைத் தொடர்ந்து உயரத்திற்கு தீச்ஜூவாலைகள்
எழுந்ததாகவும் அவர் கூறினார்.








