தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

26 மார்ச் 2025, 7:19 AM
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர், 26 மார்ச் – 4000 சதுர அடி பரப்பளவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை, அதே அளவில் அதன் அசல் பகுதிக்கு அருகில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

எனினும், சட்டப்பூர்வ ஆவணப்படுத்தல் செயல்முறை முடிந்த பிறகு, புதிய தளத்தின் கட்டுமானப் பணிகள் நடைமுறையில் உள்ள மேம்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

நடப்பில் உள்ள ஆலயக் கட்டமைப்பை இடிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியதாகவும் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா கூறினார்.

இடமாற்ற செயல்முறை முழுமையாக அமைதியான சூழ்நிலையில் நிறைவடையும் வரை அந்த ஆலயம் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படும். இத் தீர்வு இச்சம்பவத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு முன்னுதாரணமாக அதைப் பயன்படுத்த முடியாது என்றும் டாக்டர் சலிஹா வலியுறுத்தினார்.

இன்று, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக கோபுரத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார். — பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.