MEDIA STATEMENT

இஸ்ரேலிய தாக்குதலின் எதிரொலி- 124,000 பாலஸ்தீனர்கள்  காஸாவிலிருந்து வெளியேற்றம்

26 மார்ச் 2025, 2:12 AM
இஸ்ரேலிய தாக்குதலின் எதிரொலி- 124,000 பாலஸ்தீனர்கள்  காஸாவிலிருந்து வெளியேற்றம்

காஸா, மார்ச் 26- இஸ்ரேல் இராணுவத்தின்  வான் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அண்மைய சில தினங்களில்  காஸா பகுதியிலிருந்து 124,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக மேற்கு ஆசியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸாவிலிருந்து  124,000 பேர் அண்மைய  சில நாட்களில் இடம் பெயர்ந்து உள்ளது பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா நேற்றிரவு தனது எக்ஸ்  தளத்தில்  வெளியிட்ட ஒரு பதிவில் கூறியது.

இடைவிடாத வான்வழித் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு  பாலஸ்தீனர்கள் அங்கிருந்து  வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  மக்கள் குடும்பம் குடும்பமாக  புகலிடம், பாதுகாப்பு மற்றும் இலக்கின்றி  தங்களிடம் உள்ள அனைத்தையும் சுமந்து செல்கின்றனர்.

தற்போது நிகழ்ந்து வரும் முற்றுகை அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தி உள்ளது.  இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.   காஸாவின் தற்போதைய  நிலைமையை "மனிதாபிமான பேரழிவு" என அந்த நிறுவனம் விவரித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கப்பட்ட  வான்வழித் தாக்குதல்கள், கடந்தாண்டு டிசம்பர் மாதம்  19ஆம் தேதி  எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் சமரசம் மூலம் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.