MEDIA STATEMENT

பெட்டாலிங் ஜெயா கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு அகமது அகிர் போட்டி

23 மார்ச் 2025, 8:37 AM
பெட்டாலிங் ஜெயா கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு அகமது அகிர் போட்டி

சுபாங் ஜெயா, மார்ச் 23- முன்பு தாம் வகித்த பெட்டாலிங் ஜெயா தொகுதி கெஅடிலான்  துணைத் தலைவர் பதவிக்கு தாம் மீண்டும் போட்டியிடவுள்ளதாக  தாமான் மேடான் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் வேட்பாளர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீ செத்தியா மாநில சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் முகமது ஃபாஹ்மி ங்காவுடன் நேரடிப் போட்டியை தாம் எதிர்கொள்ளவுள்ளதாக  அகமது அகிர் பவான் சிக் கூறினார்.

எனது முந்தைய பதவியான  தொகுதி துணைத் தலைவர் பதவியை  நான் பாதுகாப்பேன்... தொகுதி  தலைவர் பதவிக்கு ,  போட்டியிட மாட்டேன் என்றால் நான் முதலில் எனது தற்போதைய பதவியை  தற்காக்க  வேண்டும் என்று நினைக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதோடு ஒரு குழுவாக கட்சியின் நலனுக்கு  ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி அதிகம் பேசுகிறோம் என்று நேற்று இங்குள்ள மைடினில்  பேரங்காடியில் நடைபெற்ற தாமான் மேடான் தொகுதி நிலையிலான ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டு ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

இதற்கிடையில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்ய முடியும் என்று தாமான் மேடான் தொகுதி  ஒருங்கிணைப்பாளர் ஹலிமி அபு பாக்கர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த ஏப்ரல் மாதம் நடைபெறும் கெடிலான் தேர்தலில் மறவாமல் வாக்களிக்கும் படி  வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம். நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். ஜனநாயக கடமையை நிறைவேற்றத் தவறாதீர்கள் என்று அவர் கூறினார்.

கெஅடிலான் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெற உள்ளன. அதே நேரத்தில் மத்திய தலைமைத் தேர்தல் மே 24 அன்று நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.