பெட்டாலிங் ஜெயா: மார் 18 ;- ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கூற்றை உள்துறை அமைச்சர் சைஃபுடின் மறுத்தார். 2019 ஆம் ஆண்டில் இந்துக்கள் மற்றும் சீனர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பின்னர், மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய குடியுரிமை வழங்கப் பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான கூற்றுகளையும் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
.ஜாகிருக்கு 6 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பெர்காசா தலைவர் இப்ராஹிம் அலியிடமிருந்து “பஹ்லாவன் பெர்காசா” விருதைப் பெறும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடியுரிமை வழங்கப்பட்டதாக வெளியிடப்பட்ட போலி செய்தியையும் சாடினார்.
ஜாகிருக்கு 2015 ஆம் ஆண்டில் பாரிசன் நேஷனல் அரசாங்கம் மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத்தை வழங்கியது.
2017 ஆம் ஆண்டில், ஜாகிர் இங்கு நிரந்தர வசிப்பிடத்தை வழங்கிய பிறகு மலேசிய குடியுரிமை நாடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் அவரது மலேசிய குடியுரிமை விண்ணப்பம் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு கோத்தா பாருவில் ஒரு உரையின் போது, நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் சீனர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜாகிர் மலேசியாவில் பேசுவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், பிப்ரவரி 20 அன்று, சர்ச்சைக்குரிய போதகர் பொது உரைகளை வழங்குவதைத் தடுக்கும் எந்த உத்தரவும் தற்போது இல்லை என்று சைஃபுதீன் கூறினார்.



