MEDIA STATEMENT

சுக்மா தொடக்கவிழா இடமாக பெட்ரோனாஸ் எஸ்.ஐ.சி.  பந்தயத் தடம்- விரைவில் முடிவு 

18 மார்ச் 2025, 8:20 AM
சுக்மா தொடக்கவிழா இடமாக பெட்ரோனாஸ் எஸ்.ஐ.சி.  பந்தயத் தடம்- விரைவில் முடிவு 

ஷா ஆலம், மார்ச் 18- சுக்மா  எனப்படும் 22வது   மலேசியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நடைபெறும்  இடமாக பெட்ரோனாஸ் சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடம்  (பெட்ரோனாஸ் எஸ்.ஐ.சி.) தேர்வு செய்யப்படுவது  கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர்  தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு சுக்மா தொடக்க விழாவுக்கான  இடமாக பெட்ரோனாஸ் எஸ் ஐ.சி. தேர்வு பெறுவது  தற்போது 80 சதவீத உறுதிப்படுததப்பட்ட நிலையில்  இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து வருகிறது என்று  முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

இதுவரை, பெட்ரோனாஸ் எஸ். ஐ.சி. பந்தயத் தடத்தை   திறப்பு விழாவிற்கான இடம் மற்றும் செயலகமாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுவதை  கிட்டத்தட்ட 80 விழுக்காடு எங்களால் உறுதிப்படுத்த முடியும். மேலும் செலவுகள் மற்றும் இதர விஷயங்களை அவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்று அவர் சொன்னார்.

பெட்ரோனாஸ்  எஸ். ஐ. சி. தான் தொடக்க விழாவுக்கான  இடம் என்று நான் சொல்ல முடியும். (அது நிராகரிக்கப்பட்டால்) இரண்டாவது  தேர்வாக எம்.பி.பி. ஜே. அரங்கம் அமையலாம். ஆனால் பெட்ரோனாஸ்  எஸ். ஐ.சி. இதில் முழு  ஆர்வம் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

நேற்றிரவு இங்குள்ள பெட்டல்ஸ் ஈவென்ட் ஸ்பேஸில் சிலாங்கூர் இளைஞர்களுடன் நடந்த இப்தார் விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.