காஸா, மேற்கு கரையில் அனைத்துலக அமைதிப்படை- எகிப்து பரிந்துரை

18 மார்ச் 2025, 7:48 AM
காஸா, மேற்கு கரையில் அனைத்துலக அமைதிப்படை- எகிப்து பரிந்துரை

இஸ்தான்புல், மார்ச் 18-  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காஸா  பகுதியில் அனைத்துலக  அமைதிகாப்புப்  படைகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின்  பாதுகாப்பு மன்றத்திடம்  ஒரு திட்டத்தை எகிப்து 

சமர்ப்பித்துள்ளது. .

காஸாவில் சுகாதாரத் துறையின் புனரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக எகிப்திய வெளியுறவு அமைச்சர் பாட்ர் அப்தெலட்டி, வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அனைத்துலக பிரதிநிதிகளுக்கு இடையே கெய்ரோவில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த திட்டம் முன்வைக்கப்பட்டதாக அனடோலு ஏஜென்சி  செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

காஸா மற்றும் மேற்குக் கரையில் அனைத்துலக அமைதி காக்கும் படைகளை நிலைநிறுத்துவது குறித்து பரிசீலனை செய்ய பாதுகாப்பு மன்றத்திடம் திட்டம் உள்ளது என்று அப்தெலட்டி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சுதந்திர பாலஸ்தீன அரசின் உருவாக்கத்திற்கு  உத்தரவாதம் அளிக்கும் கால அட்டவணைக்கு ஏற்ப தெளிவான ஆணை மற்றும் அதிகாரத்துடன்கூடிய அனைத்துலக  அமைதி காக்கும் படையை நிறுத்துவதற்கான பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இது செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அவர் விளக்கவில்லை.

பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அரசியல் முயற்சிகளின் ஒரு பகுதியாக காஸா மற்றும் மேற்குக் கரையில் அமைதி காக்கும் படையினரை நிறுத்துமாறு கடந்த  மார்ச் 4ஆம் தேதி எகிப்தில் நடைபெற்ற காஸா மீதான அவசர அரபு உச்ச நிலை மாநாடு  கோரிக்கை விடுத்தது.

பாலஸ்தீன மக்களை இட மாற்றம் செய்யாமல்  காஸாவை  மீண்டும் மறுநிர்மாணிப்பு செய்வதற்கான  அரபுத் திட்டம் பிராந்திய மற்றும் அனைத்துலக ஆதரவைப் பெற்றுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும்  மிருகத்தனமான தாக்குதலில் 48,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

அவர்களில்  பெரும்பாலோர் பெண்கள் மற்றும்  சிறார்களாவர்.  அதே சமயம்,  இப்போரில்  112,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிராந்தியத்தை பேரழிவிற்கு உட்படுத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.