MEDIA STATEMENT

சுமத்ராவில் மிதமான நிலநடுக்கம்- மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது

18 மார்ச் 2025, 7:09 AM
சுமத்ராவில் மிதமான நிலநடுக்கம்- மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 18-  இந்தோனேசியாவின் வட சுமத்ராவின் மேற்கு கடற்கரையில்  ரிக்டர் அளவில்  5.1 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் இன்று காலை 6.22 மணிக்கு ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கிலோ மீட்டர்  தொலைவிலும் 10 கிலோமீட்டர்  ஆழத்திலும் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.

இந்த பூகம்பத்தின் எதிரொலியாக பெர்லிஸ், கெடா, பினாங்கு தீவு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களிலும் நில  அதிர்வுகள் உணரப்பட்டன.

எனினும்,  இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.