MEDIA STATEMENT

இளவரசர் தெங்கு அமீர் ஷா, 634 ஆதரவற்றோருக்கு RM95,100 நன்கொடை

16 மார்ச் 2025, 4:46 AM
இளவரசர் தெங்கு அமீர் ஷா, 634 ஆதரவற்றோருக்கு RM95,100 நன்கொடை

உலு லங்காட் மார்ச் 15 ; சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா, இங்குள்ள பாண்டான் இண்டாவில் உள்ள அல்-அசிம் மசூதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 634 ஆதரவற்றோருக்கு RM95,100 தொகையை நன்கொடையை எடுத்து  வழங்கினார்.

Yide தலைவர் டான் ஸ்ரீ மஸ்லான் மன்சோர் கூறுகையில், 1,412 பெறுநர்கள் சம்பந்தப்பட்ட மீதமுள்ள பங்களிப்புகள், RM211,800, அந்தந்த வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் தொடர்ந்து  உதவி பெறுவதை உறுதிசெய்யப் படும்.

"வரவிருக்கும் ஐடில்ஃபிட்ரியைக் கொண்டாட அனாதைகளுக்கு உதவுவதில் யிட் என்னும் இஸ்லாமிய  அறக்கட்டளை  மேற்கொண்ட முயற்சியே இந்த பங்களிப்பாகும்" என்று அவர் இன்றைய நிகழ்வின் உரையில் கூறினார்.

இந்த நிகழ்வில், இமானுபாயி அறக்கட்டளைக்கு  நன்கொடை அளித்த RM30,000 தொகையான நன்கொடை காசோலையை யிட் அறக்கட்டளையிடம் ஒப்படைத்ததையும் ராஜா மூடா பார்வையிட்டார்.

சிலாங்கூர் முழுவதும் 13,000 அனாதைகளுக்கு  இந்த ஆண்டு மொத்தம் RM 1.95 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐடில்பித்திரி Aidilfitri நன்கொடைகளைப் பெற்றதாக மஸ்லான் முன்பு தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, சிலாங்கூரில் உள்ள இந்த குழுவை கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பிறப்பித்த ஆணைக்கு இணங்க, இந்த மாநிலத்தில் உள்ள அனாதைகளின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து கவனித்து கொள்வது உறுதி செய்வதில் YIDE உறுதிபூண்டுள்ளது.

ஐடில்பித்ரி பண்டிகையை முன்னிட்டு, உலு லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட அனாதைகள் யிட் அறக்கட்டளை இடமிருந்து நன்கொடைகளை பெற்றனர்.

உலு லங்காட் மாவட்டத்தில் மொத்தம் 2,046 அனாதைகள் இந்த ஆண்டு ஐடில் பித்திரியை முன்னிட்டு டாருல் ஏஷான் சிலாங்கூர் இஸ்லாமிய அறக்கட்டளையிடமிருந்து (யிட்) RM306,900 நன்கொடைகளை பெற்றனர்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.