MEDIA STATEMENT

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிஞ்சான் உறுப்பினர் ரொக்கம், உணவுக்கூடைகளை வழங்கினார்

15 மார்ச் 2025, 7:03 AM
புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிஞ்சான் உறுப்பினர் ரொக்கம், உணவுக்கூடைகளை வழங்கினார்
புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிஞ்சான் உறுப்பினர் ரொக்கம், உணவுக்கூடைகளை வழங்கினார்

சபாக் பெர்ணம், மார்ச் 15- சிகிஞ்சான்  தாமான் ரியாவில்  புயலால் பாதிக்கப்பட்ட மொத்தம் 48 பேருக்கு ரொக்க நிதி உதவி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உதவ மொத்தம் 30,000 வெள்ளி  ஒதுக்கப்பட்டுள்ளதாக சிகிஞ்சான்  சட்டமன்ற உறுப்பினர் டத்தோ  இங் சியி லிம் தெரிவித்தார் .

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைப் பொறுத்து உணவு கூடையோடு வெ.300 முதல் வெ.500 வரை ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த உதவி சிறியதாகவும்  முழுமையாக உதவும் அளவுக்கு போதுமானதாகவும் இல்லாதிருக்கலாம். ஆயினும்,  பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்று இன்று டேவான் ஶ்ரீ சிகிஞ்சானில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்வுக்குப்  பிறகு நிருபர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 49 வயதான முகமது சியுக்ரி அப்துல்லா,  நோன்பு பெருநாளை முன்னிட்டு  வாடிக்கையாளர்  தைப்பதற்கு  தனது மனைவியிடம் ஆர்டர் செய்த  30க்கும் மேற்பட்ட உடைகள்  சேதமடைந்ததைக் கண்டு  வருத்துவதாகக் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.